• Jul 25 2025

2ஆவது முறையாக திருமணம் செய்யவுள்ள நயன்தாரா.. ஆன்மீகத்தால் எடுத்த திடீர் முடிவு.. மாப்பிள்ளை யார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.


இவர்களின் காதல் கல்யாணத்தில் முடிந்தாலும், திருமணம் முடிந்ததிலிருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டவாறே இருக்கின்றனர். அதாவது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நாளன்று பவுன்சர்கள் சில பிரபலங்களை தொந்தரவு செய்ததாக கூறப்பட்டது.


அதன் பின்னர் மறுநாள் நயன்தாரா திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் செருப்பு அணிந்து சென்று சர்ச்சையில் வசமாக மாட்டிக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நயன்-விக்கி தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது மீண்டும் பெரியசர்ச்சை கிளம்பியது.


இவ்வாறு திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து கஷ்டங்களை எதிர்நோக்கி வந்த நயன்தாராவிற்கு சினிமாவிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது திருமணத்திற்கு பின்பு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாது சமீபத்தில் கூட 'AK 62' படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவன் கையிலிருந்து நழுவிப் போனது.


இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தவறான நேரத்தில் திருமணம் செய்து கொண்டது தான் என்று ஜோசியகாரர் ஒருவர் கூறியுள்ளாராம். இதனால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதன் பின்னராவது இவர்களது வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்க வேண்டும் எனக் கூறி ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement