• Jul 24 2025

கணவரைத் தொடர்ந்து பிரபல இயக்குநரின் படத்திலிருந்து நீக்கப்பட்ட நயன்தாரா-அட்வான்ஸை திரும்பி வாங்கிய தயாரிப்பாளர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு திருமணத்துக்குப் பிறகு  சினிமாவில் ஒரு ஹிட் படம் இன்னும் அமையவில்லை. இறுதியாக தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.


இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை அபிஷேக் பிள்ளை தயாரிக்க இருந்தார். இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்காமல் இழுத்தடித்துள்ளார் நயன்தாரா.


 இதனால் கடுப்பான தயாரிப்பு தரப்பு நயன்தாராவிடம் இருந்து கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பி வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.இதனால் நயன்தரா அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement