• Jul 26 2025

வசூலில் பயங்கரமாக அடிவாங்கிய நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம்-தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி தான் வசூலா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ந் தேதி வெளியான திரைப்படம் தான் கனெக்ட். இப்படத்தில் நயன்தாரா உடன் சத்யராஜ், வினய் ராய், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

 இப்படத்தை  விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். வழக்கமாக படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுக்கும் நயன்தாரா தனது கணவர் நடித்த படம் என்பதால் கனெக்ட் படத்திற்கு மட்டும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ப்ரமோஷன் செய்தார்.


இவ்வாறு நயன்தாரா தீயாய் வேலை செய்வதை பார்த்தால் படம் வேறலெவலில் இருக்கும்போல என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெக்னிக்கல் ரீதியாக படம் புதுவிதமான அனுபவத்தைக்கொடுத்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி வருகின்றனர்.

இதனால் கனெக்ட் படத்தின் வசூலும் பயங்கரமாக அடிவாங்கி உள்ளது. இப்படம் முதல் வார இறுதியில் அதாவது முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.5.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். அதில் தமிழகத்தில் மட்டும் ரூ.4.2 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் கனெக்ட் படத்தின் வசூல் 10 கோடியை எட்டுவதே சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement