• Jul 25 2025

நயன்தாரா படத்திற்கு வந்த திடீர்ச் சிக்கல்... கடைசி நேரத்தில் இப்படி ஆகிட்டே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கி இருப்பினும் அப்படங்களின் மூலமாக புகழ் பெற்றவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர், கடந்த 7 ஆண்டுகளாக இவரின் ஒரு படம் கூட ரிலீசாகது இருந்து வந்தது. 


இந்த நிலையில், தற்போது இவர் 'கோல்டு' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படமானது இன்று தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 


ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது இறுதியில் இன்று மலையாளத்தில் மட்டும் தான் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதன் தமிழ் வெர்ஷன் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அந்தவகையில் இப்படத்தின் சென்சார் தாமதம் ஆனதன் காரணமாக தான் தமிழில் கோல்டு திரைப்படம் இன்று ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாம். இதற்கு பதிலாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் ஒரு நாள் தாமதமாக அதாவது நாளை (டிசம்பர் 2) திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எது எவ்வாறாயினும் கோல்டு படத்தின் மலையாள வெர்ஷன் இன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகி உள்ளது. டிரைலர், டீசர் என எந்தவித புரமோஷனும் இன்றி கோல்டு திரைப்படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் மலையாள ரசிகர்கள் பலரும் குஷியோடு உள்ளனர். அதுமட்டுமல்லாது இன்று இப்படமானது தமிழ் ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.

Advertisement

Advertisement