• Jul 26 2025

ஒரு கையில் ஊசி மற்றொரு கையால் உடல் பயிற்சி -கண்கலங்க வைக்கும் சமந்தாவின் நிலை - வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சமந்தா.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் சோலோ ஹுரோயினாக நடித்து வருகின்றார்.


அந்த வகையில் இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய யசோதா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.இப்படத்தில் இவர் வாடகைத் தாயாக நடித்திருந்தார்.


இந்நிலையில் சமந்தா தன்னுடைய ஜிம் பயிற்சியாளருடன்  இருக்கும் சில புகைப்படமும், சமந்தா ஒரு கையில் ஊசியுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

மேலும் இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில் எனக்கு பிடித்த ஜிலேபிக்கு தகுதியான அளவுக்கு நான் ஒர்க் அவுட் செய்தேன் என்று எனது பயிற்சியாளர் ஜுனைத் ஷேக் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் யசோதாவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அந்த படத்தில் உள்ள ஆக்ஷன் காட்சியை நினைத்து பெருமைப் பட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்து ஜிலேபி கொடுத்தார்.


 அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் இருந்ததால் தான் இதனை என்னால் செய்ய முடிந்தது. இடைவிடாது எனக்கு ஊக்கமளித்தார் என கூறியுள்ளார். இந்த பதிவு மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement