• Sep 09 2025

சொல்லவே தேவையில்லை... 'ஜெயிலர்' படத்தைப் பார்த்து விட்டு அனிருத் முன்வைத்த முதல் விமர்சனம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக வெளியான விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .


அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தைப் பார்த்த அனிருத் தனது விமர்சனத்தையும் முன்வைத்து இருக்கின்றார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் குறிப்பிடுகையில் ஜெயிலர் திரைப்படம் சூப்பராக இருப்பதாகவும், நிச்சயம் வெற்றிக்  கோப்பையை அடிக்கும் எனவும் எமோஜிகளின் வாயிலாக  தெரிவித்துள்ளார்.


அனிருத்தின் இந்தப் பாசிட்டிவ் விளம்பரத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு 'ஜெயிலர்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement