• Jul 25 2025

Mid night இல் கணவனை எழுப்பிவிடும் பெண்... காரணத்தைக் கேட்டு பல்ப் வாங்கிய கோபிநாத்... விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்... 'Neeya Naana' promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.


இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் "அதிக FOOD ஆர்டர் பண்ணும் பெண்கள்-எதிர்க்கும் கணவர்கள்" என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறவுள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் கோபிநாத் ஒரு பெண்ணிடம் "ஏன் மிட் நைட்டில் எழுப்பிவிட்டு வீட்டுக்காரரை நூடுல்ஸ் செய்ய சொல்லுறீங்க" எனக் கேட்கின்றார். 


பதிலுக்கு அந்தப்பெண் "கிச்சனில் நானும் அவரும் மட்டும் தான் இருப்போம், வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள், அதனால் எங்களுக்குள்ள ரொமான்ஸ் அதிகரிக்கும், எங்களுக்கான பிரைவேசி இடமாக கிச்சனை மாத்துது அந்த மிட் நைட்" என்கிறார். 


இதனைக் கேட்டதும் கோபிநாத் குறித்த பெண்ணின் கணவனைப் பார்த்து "இரவு முழுக்க சமைக்க கடமைப்பட்டுள்ளீர்கள், நான் கூட என்னமோனு நினச்சேன்: என்கிறார். பெண்ணிடம் பல்ப் வாங்கிய கோபிநாத்தைப் பார்த்து அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.  


Advertisement

Advertisement