• Jul 24 2025

ரஜினியைத் தொடர்ந்து கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கவுள்ள நெல்சன் திலீப் குமார்- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் கொடுத்த அடி நெல்சன் திலீப்குமார் வாழ்க்கையில் மறக்க முடியாத வடுவாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கிவருகிறார் அவர். ரஜினிக்கும் இந்தப் படம் முக்கியமான படம் என்பதால் பார்த்து பார்த்து நிதானமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். அது சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவிலேயே தெரிந்தது.

இதனால் ஜெயிலர் படம் கண்டிப்பாக நெல்சன் திலீப்குமாருக்கு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. இதுவரை எடுக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் காட்சிகளை பார்த்த ரஜினியும், சன்பிக்சர்ஸும் ரொம்பவே ஹேப்பியாம். இதனால் ஜெயிலருக்கு பிறகு தனது கிராஃப் நிச்சயம் உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் நெல்சன் திலீப்குமார்.


அந்த உற்சாகத்தோடு சமீபத்தில் தனுஷை சந்தித்த நெல்சன் திலீப்குமார் ஒரு கதை சொன்னதாகவும், அந்தக் கதை பிடித்துப்போக அதில் தனுஷ் நடிக்க ஒத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் திட்டத்திலும் நெல்சன் திலீப்குமார் இருக்கிறார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் முதலில் தனுஷை வைத்து இயக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரித்துவிட்டு; நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் நெல்சன் திலீப்குமார் ஃபுல் பார்மில் இருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Advertisement

Advertisement