• Jul 26 2025

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டு சீரியல் நடிகை செய்த செயல்-விளாசும் நெட்டிசன்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரு அசோபாவுக்கும், பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தம்பியும், நடிகருமான ராஜீவ் சென்னுக்கும் திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு ஜியானா சென் என்கிற மகள் உள்ளார்.

இந்நிலையில் ராஜீவ் சென்னும், சாரு அசோபாவும் பிரிந்துவிட்டார்கள். விவாகரத்து கோரி ராஜீவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் சாரு.

மேலும் இந்த விஷயத்தில் சாருவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் சுஷ்மிதா சென். மகள் பிறந்து 9 மாதங்கள் ஆனதை கொண்டாட இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிர்ந்தார் சாரு.

அவர் ஆரஞ்சு நிறத்தில் புடவை அணிந்து நெற்றி வகுடில் குங்குமம் வைத்திருக்கிறார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் தெரிவித்திருப்பதாவது….

விவாகரத்து தான் ஆகிவிட்டதே. அதன் பிறகு எதற்கு குங்குமம் . நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறீர்களா சாரு என கூறி வருகின்றனர்.

திருமணமானதில் இருந்தே ராஜீவ், சாரு இடையே பிரச்சனையாக இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, ஒருவரை மற்றொருவர் பின்தொடர்வதை நிறுத்தினார்கள்.

அத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. இனியும் முடியாது. அதனால் தான் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என்று சாரு கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement