• Jul 24 2025

என்னவொரு தெனாவெட்டான பேச்சு நன்றி மறந்த ராஷ்மிகா என மோசமாக விளாசி வரும் நெட்டிசன்கள்- ஓ இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ராஷ்மிகா மந்தனா.இப்படத்தில் கதாநாயகனாக ரக்ஷித் ஷெட்டி என்பவர் நடித்திருந்தார்.ரொமான்டிக் காமெடியான கிரிக் பார்ட்டி வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அது குறித்து ரிஷப் ஷெட்டி ட்விட் செய்துள்ளார்.

கிரிக் பார்ட்டி தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு அவர் கூறியதாவது, கிரிக் பார்ட்டி ரிலீஸாகி ஆறு ஆண்டுகள் கழித்தும் கூட உங்களின் மகிழ்ச்சி ஆரவாரம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்னை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி என்றார். ஆனால் அவர் ராஷ்மிகா மந்தனாவின் பெயரை மென்ஷன் செய்யவில்லை.


ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அனைத்து மொழி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றது காந்தாரா. பிற மாநிலங்களில் காந்தாரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஸ்கிரீன்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். 

இந்நிலையில் அந்த படத்தை பார்க்கவில்லை என்று கூறினார் ராஷ்மிகா.காந்தாரா பற்றி ரஷ்மிகா கூறியதை கேட்ட கன்னட ரசிகர்கள் அவரை விளாசினார்கள். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருந்து கொண்டு, நாடே கொண்டாடும் ஒரு கன்னட படத்தை பார்க்கவில்லை என்று இப்படியா பெருமையாக சொல்வது என்று கன்னட சினிமா ரசிகர்கள் விமர்சித்தார்கள். ரஷ்மிகா சொன்னது காந்தாரா படக்குழுவையும் அதிருப்தி அடைய வைத்தது.

காந்தாரா விவகாரம் தொடர்பான கோபத்தில் தான் கிரிக் பார்ட்டி தொடர்பான டுவிட்டில் ரஷ்மிகாவின் பெயரை ரிஷப் ஷெட்டி குறிப்பிடவில்லை என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். விஜய்யுடன் சேர்ந்து ரஷ்மிகா நடித்திருக்கும் வாரிசு படம் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குநரின் கோபத்திற்கு ரஷ்மிகா ஆளாகியிருக்கிறாரே என ரசிகர்கள் கூறி வருவதையும் காணலாம்.








Advertisement

Advertisement