• Jul 25 2025

உள்ளாடை தெரிய தியேட்டருக்கு வந்த பிரபல நடிகை... படம் பார்க்க வந்தாங்களா இல்லேன்னால்... திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சோனி டிவியில் 2016 இல் ஒளிபரப்பான 'படே பையா கி துல்ஹனியா' எனும் டிவி தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உர்ஃபி ஜாவேத். அதனைத் தொடர்ந்து இவர் 'சந்திர நந்தினி, மெரி துர்கா, ஜீஜி மா, தாயன்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். 


இவ்வாறாக பல சீரியல்களில் நடித்து கலக்கி வந்த உர்ஃபி ஜாவேத் சமீப காலமாக ஹாட் உடைகளை அணிந்து கொண்டு சோஷியல் மீடியாவில் உள்ள ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார்.

அதாவது பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு தான் உர்ஃபி ஜாவேத் கவர்ச்சி உடையணிந்து இத்தனை வித்தியாசங்களை காட்டத் தொடங்கி உள்ளார் என ரசிகர்கள் அவரைக் கமெண்ட்டுகளால் கழுவி ஊற்றி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் செய்தியாளர்களில் ஒரு சிலர் சமீபத்தில் நடிகை  உர்ஃபி ஜாவேத் நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த படு மோசமான கவர்ச்சி உடையை பார்த்து கமெண்ட் அடிக்க, உடனடியாக அவருடன் வம்புக்கு சென்று "என் உடையை பற்றியெல்லாம் கமெண்ட் செய்யக் கூடாது" எனக் கூறி அவர்களுடன் பெரிய சண்டையே போட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிவிஆர் தியேட்டரில் புதிய படம் பார்க்க வந்த நடிகை உர்ஃபி ஜாவேத் கிராப் டாப் அணிந்து கொண்டு உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸில் தரிசனம் கொடுத்து ரசிகர்களை பலரையும் பதற செய்திருந்தார். 


இதனை பார்த்த நெட்டிசன்கள் "பிவிஆருக்கு படம் பார்க்க வந்தது போல தெரியல, நல்லா படம் காட்ட வந்ததை போலத் தெரிகிறது" என உர்ஃபி ஜாவேத்தின் போட்டோக்களை போட்டு சோஷியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

அத்தோடு "எல்லை மீறி பொது இடங்களுக்கு இவ்வளவு ஆபாசமாக வரும் இவரை யாருமே தடுக்க மாட்டார்களா" என்றும் நெட்டிசன்கள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement