• Jul 24 2025

சன் டிவி நேர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு! சீரியல் நேரங்களில் அதிரடி மாற்றம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் தான்  'பூவா தலையா'. குறித்த சீரியலில் 'புது வசந்தம்' படத்தில் நடித்த பிரபல நடிகை சித்தாரா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்தநிலையில், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. அதுவும் 5 மணியில் இருந்து 11:00 மணிவரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் இடையே வரும் விளம்பரங்களை கூட மிஸ் பண்ணாமல் பார்க்கும் நிலையில் தான்  இல்லத்தரசிகள் உள்ளனர்.

அதன்படி, 'ஆனந்த ராகம்' சீரியலில் ஈஸ்வரி போல செம்ம கெத்தா, தைரியமா எந்த பிரச்சனை வந்தாலும் நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என அட்வைஸ் பண்ணும் அளவுக்கு இந்த சீரியலின் கதாநாயகி கதாபாத்திரம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே குறித்த சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி இளம் ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. 


மேலும இந்த சீரியல் தற்போது மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியல் நேரம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களால் ரசிகர்களின் அப்செட்டாகியுள்ளனர்.

அதன்படி, குறித்த நேரத்தில் சன் டிவியில் புதிதாக வரவுள்ள  'பூவா தலையா' சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக காரணத்தால்  'ஆனந்த ராகம்' இரவு 11:30 மணிக்கு ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதேவேளை, 'பாண்டவர் இல்லம்' சீரியல்  தற்போது முடிவடைய உள்ளதால் அந்த நேரத்தில் ஒளிபரப்பாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement