• Sep 11 2025

பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து வெளியாகிய புதிய கிளிம்ஸ் வீடியோ-

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்தனத்தின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  இப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.

 இந்த ரிலீஸ் தேதி குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், அவை யாவும் உண்மையில்லை என அதன்பின் தெரியவந்தது.இந்நிலையில், ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் கார்த்தி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கிலிம்ஸ் வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement