• Jul 25 2025

புது வாழ்க்கை புதுமனைவி சூப்பர் சமையல்- மனைவியின் செயலால் புலம்பித் தள்ளிய ரவீந்தர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் கடைசியாக சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை தயாரித்து இருந்தார். இதனை அடுத்து அண்மையில் சீரியல் நடிகை மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்து கொண்டார்.

FATMAN என்று இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படும் இவர் மகாலக்ஷ்மியைத் திடீரென திருமணம் செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருந்தாலும் தற்பொழுது இருவரும் ட்ரெண்டிங் ஜோடியாகவே வலம் வருகின்றனர்.


திருமணத்திற்குப் பிறகு பேட்டி ஒன்றில் பேசும்போது மகாலக்ஷ்மி,  “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும் என்றார்.

பின்னர் அவ்வப்போது தாங்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் ரவீந்தர் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோர், சோஷியல் மீடியாவில் பகிர்ந்தும் வருகின்றனர். 


இந்நிலையில்தான் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி சமையல் குறித்த க்யூட்டான புகைப்பட பதிவை பகிர்ந்துள்ளார். அதில் வேகவைத்த முட்டை கருகியிருப்பதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள  ரவீந்தர், “என் வாழ்க்கையிலேயே முட்டை இந்த நிலைக்கு கருகி போனதை நான் பார்த்ததில்லை.  மகலாக்ஷ்மி நிச்சயமாக என் எடை குறைய வைத்துவிடுவார். புது வாழ்க்கை. புதுமனைவி.. சூப்பர் சமையல்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement