• Jul 25 2025

கிஷோர் நாயகனாக நடித்து வரும் வீரப்பன் வெப் தொடருக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் தான்'வனயுத்தம்.சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கிஷோர் நடித்து வருகின்றார்.

இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement