• Jul 23 2025

சன் டி.வி நேர்களுக்கு விருந்தாக வரவுள்ள புது சீரியல்! இதுதான் கதையா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் தான்  'பூவா தலையா'. தற்போது குறித்த சீரியல் தொடர்பில் சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி, சன் டிவி-யில் புதியதாக தொடங்கப்பட உள்ள சீரியலில் 'புது வசந்தம்' படத்தில் நடித்த பிரபல நடிகை சித்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், குறித்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரியலின் தலைப்பே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்திச் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், 1990-ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான 'புது வசந்தம்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை சித்தாரா 'பூவா தலையா' என்ற சீரியலில் நடிக்கிறார் என்பதுதான். 

அதுமட்டுமல்ல 'பாவம் கணேசன்' சீரியலில் நடித்த சுவேதா ஷ்ரிம்ப்டன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதோடு, நடிகராக கிஸோ தேவர் நடிக்கவுள்ளார். இவர்களோடு வையாபுரியும் குறித்த சீரியலில் இணைந்து நடிக்கவுள்ளார்.

அத்துடன், 'பூவா தலையா' சீரியலின் கதை குறித்து வட்டாரங்கள் தெரிவிக்கையில்,  ஒரு சின்ன நகரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒரு மாநகரப் பெண்ணைக் காதலிப்பதைச் சுற்றியே கதை நகரும் என்று கூறுகிறார்கள். 

இருப்பினும், அவளது கூச்ச சுபாவமும் தொடர்ச்சியான சூழ்நிலைகளும் அவளை அவனிடம் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கின்றன என மிகவும் சுவாரசியமாக செல்லவுள்ளது குறித்த சீரியல்.

இதேவேளை,  'பூவா தலையா' சீரியலில் வேறு எந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








 




 

Advertisement

Advertisement