• Jul 25 2025

பேயாக நடித்த மீரா மிதுனின் படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அதிரடி முடிவெடுத்த படக்குழு..!

stella / 2 years ago

Advertisement

Listen News!


நல்ல காமெடியான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும்  சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து  60% தள்ளுபடியும்  இரண்டாம் நாள் 40% தள்ளுபடியும் செய்து டிக்கெட்  வழங்கப்பட இருக்கிறது.

 இதற்கான பேச்சுவார்த்தை வினியோகஸ்தர்களிடமும் , திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators  நிறுவனத்தினர் பேசி வருகின்றனர். இப்படத்தில், மீரா மிதுனை தவிர, முக்கிய வேடத்தில்...கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர்,  செல்வகுமார், ஜெய் சங்கர், துரை ஆனந்த்,ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். 


இப்படமானது மிகவும் காமெடியாக ஒரு பேயை தேடுவதை மையப்படுத்தி இயக்கியுள்ளார் இயக்குநர் அன்பரசன். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை. குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பாதிலேயே மீராமிதுன் சொல்லாமல் கொள்ளமல் எஸ்கேப் ஆனதால்... இந்த படத்தின், கிளைமேக்ஸ் காட்சி முற்றிலும் மாற்றி எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த படத்தின, படத்தின் பாதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து, அவர் தவறாக பேசியதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இவர், மீண்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாமல் தலைமறைவான மீரா மிதுனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 விரைவில் மீராமிதுன் பேயாக நடித்திருக்கும், திரைப்படம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் வெளியான பின்னர்.இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement