• Jul 25 2025

இப்படி ஒரு திறமையான இந்திய வடிவமைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சி- நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையைப் போல் பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். பாடகியாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்ருதி, பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.


 தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் தெலுங்கில் கடைசியாக இவர் நடித்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது.


இதையடுத்து தெலுங்கில் அவர் நடிப்பில் சலார் என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படம் தயாராகி வருகிறது.கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதுதவிர பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.


இந்த நிலையில் வித்தியாசமான கறுப்பாடை அறிந்த படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தககது.




Advertisement

Advertisement