• Jul 24 2025

கணவர் ஆதியை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமழை பொழிந்த நிக்கி கல்ராணி- வைரலாகும் ரொமாண்டிக்கான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில்  ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் ஆதி. இவர் இறுதியாக  லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த 'வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார்


பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.இவர்கள் இருவரினதும் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.


நிக்கி கல்ராணி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, தனது 31-வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.அப்போது எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி நிக்கி கல்ராணி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை கொலாஜ் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். 


அதில் கணவருடன் சேர்ந்து நிக்கி கல்ராணி தோன்றியுள்ளார். அந்த பதிவில், "இன்னும் கொஞ்சம், பல லட்சம் முறை உன்னை காதலிக்க வேண்டும். இனிய காதலர் தின வாழ்த்துகள் நானு" என நிக்கி கல்ராணி ஆதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். நானு என்ற செல்லப் பெயர் வைத்து ஆதியை நிக்கி கல்ராணி வாழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement