• Jul 25 2025

நிர்வாணமா வீடியோ அனுப்பு.. டீல் பேசியவரை தலைதெறிக்க ஓடவிட்ட சன்டிவி சீரியல் நடிகை...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஆனந்த ராகம் என்கிற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிகை ரிஹானாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ரிஹானா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சோசியல் மீடியாவால்  தான் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியுள்ளார்.


அதன்படி இன்ஸ்டாகிராமில் ஒருவர் தனக்கு மெசேஜ் அனுப்பி, நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறு தெரிவித்தார். இதன் பின்னர் சில பாகங்களை மட்டும் வீடியோ எடுத்து அனுப்பு, சில கேவலமான செயல்களை செய்து எனக்கு வீடியோ அனுப்பு என கேட்டிருந்தார். அப்படி செய்தால் ரூ.15 லட்சம் பணம் தருவதாகவும் அந்த நபர் அந்த மெசேஜில் தெரிவித்து இருந்தாராம். அதுமட்டுமின்றி பணம் அனுப்ப அக்கவுண்ட் நம்பரை அந்த நபர் கேட்டாராம்.


மேலும் இந்த நபரை சும்மா விடக்கூடாது எப்படியாவது மாட்டிவிட வேண்டுமென முடிவெடுத்த ரிஹானா. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதைக்கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அதன் பின் ரிப்ளை செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதுரை அந்த நபர் தன்னிடம் மாட்டவில்லை என ரிஹானா அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி சீரியல் நடிகர் அர்னவ்வின் ரசிகர்கள் குறித்தும் பேசியிருந்தார் ரிஹானா.

சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா ஆகியோருக்கு இடையே பிரச்சனை நடந்தபோது அதுகுறித்து ரிஹானாவும் சோசியல் மீடியாவில் அர்னவ் பற்றி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். இப்படி பேசியதற்கு பின்னர் அர்னவ்வின் ரசிகர்கள் தன்னிடம் கொச்சையாக பேசியதாகவும், ரசிகர் என்கிற பெயரில் அவர்கள் மிகவும் கீழ்தரமாக நடந்துகொண்டதாகவும் ரிஹானா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement