• Jul 25 2025

ஏன்டா நம்ம அன்பு யாருக்கும் புரியல... அசலை நினைத்து மீண்டும் உருகும் நிவாஷினி.. கண் கலங்கிய ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்ச்சி நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருமே எளிதில் பிரபலமடைந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாது இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.


அந்தவகையில் இந்த வார இறுதியில் அசல் எலிமினேற் ஆகி வெளியே சென்றார். அசல் எலிமினேட் ஆவதாக கமல் அறிவித்ததுமே, நிவாஷினி கண்கலங்கி விக்கி விக்கி அழத் தொடங்கினார். அவரை அசல் வழக்கம் போல் கட்டிப்பிடித்து அசல் தேற்றி, ஏய் அழாதே என்னைப் பாக்கணும் தோனுச்சுனா சீக்கிரமா வெளியில் வா என்று கிண்டலடித்துவிட்டு ஜாலியாகவே அசல் வீட்டை விட்டு வெளியில் சென்றார்.


ஆனால் அசலின் பிரிவை தாங்க முடியாத நிவாஷினியோ தினமும் அழுது அழுது தனியாக புலம்பி வருகிறார். அதாவது "ஏன்டா போன நீ இல்லாமல் என்னால சாப்பிட முடியல, தூங்க முடியலடா, மறக்க முடியல இந்த 21 நாள்ல நான் காலையில் எழுந்ததும் உன் முகத்தைதான் பார்ப்பேன். இந்த வீட்டில் எத்தனை பேர் இருக்காங்க, அவங்களை யாரையாவது வெளியில் அனுப்பி இருக்கலாமே, அசல் தான் கிடைச்சானா" எனக் கூறி மீண்டும் மீண்டும் புலம்பி வருகின்றார்.


அதுமட்டுமல்லாது "இந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் நம் அன்பு புரியல' என்று அழுதபடி கேமராவை பார்த்து பேசுகிறார். அத்தோடு "உன் சட்டையை நான் எடுத்து வச்சிக்கிட்டேன், அதைத்தான் போட்டு இருக்கிறேன் வெளியில் வந்ததும், உன்னைப்பார்த்து இந்த சட்டையை வாஷ் பண்ணி தருவேன்" என குழந்தை போல அசலை நினைத்து நிவாஷினி அழுது கொண்டே இருப்பதை பார்த்து பார்வையாளர்களும் கொஞ்சம் கண் கலங்கிப் போனார்கள். முதலில் நிவாஷினியைத் திட்டிய ரசிகர்களில் பலர் தற்போது இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement