• Jul 23 2025

சூர்யா எத்தனை படத்தில நடிச்சாலும் இந்த படத்தில வருகிற சீன் மாதிரி எதுவும் இல்லை- அவரின் அப்பாவே கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முதன்மையான கதாநாயகனக இருப்பவர் தான் சூர்யா.இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.இதனால் இவரது படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

மேலும் இவர் பாலாவின் இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகி விட்டார்.பாலா சூர்யாவை நடத்திய முறை தான்  அப்படத்திலிருந்து அவர் விலகக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.அடுத்து அவரது நடிப்பில் வரப்போகும் வாடிவாசல் படத்திற்காக மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.


இப்படத்தின் மூலம் வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார் சூர்யா.நடிகர் சூர்யா நடித்த படங்களில் ரசிகர்களுக்கு எத்தனையோ பேவரெட் படங்கள் உள்ளன. அதில் நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமாருக்கு அவர் நடித்த படத்தில் ஒரு பேவரெட் சீன் உள்ளதாம்.


அதாவது நந்தா படத்தில் தனது தாய் சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார் என்று தெரிந்தும் கண்ணில் நீர் கோர்க்கச் சிரிப்பார்.சூர்யாவே நினைத்தாலும் இனிமேல் அப்படி நடிக்க முடியாது. இனி அவன் நிறைய படங்கள் நடித்தாலும் இதுதான் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று என கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement