• Jul 25 2025

உண்மையை எப்போது சொன்னாலும் மாறாது- பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரிக்கு ஆதரவு தெரிவித்த அபிராமி- பதிலடி கொடுத்த சின்மயி

stella / 2 years ago

Advertisement

Listen News!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் உள்பட நான்கு பேர் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்து அங்கு பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி ஒருவரும் புகார் தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கல்லூரி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி, இந்த கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார். ஏனெனில் அவர் அந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஆவார். அவர் ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.


நான் இந்த கல்லூரியில் பயின்ற போதெல்லாம் இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை. கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார். 


கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக அபிராமி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல் அந்த பேட்டியில் பாடகி சின்மயியையும் அபிராமி மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருந்ததால் கடுப்பான சின்மயி, அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் உண்மை உண்மை தான். நீங்க நம்புனாலும் நம்பாவிட்டாலும் உண்மை பொய்யாகிவிடாது” என பதிவிட்டிருந்தார். 


Advertisement

Advertisement