• Jul 25 2025

இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்-கடைசி படம் இதுதான்!” - அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதியின் அதிரடி பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டானின்.இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

 திமுக கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ரவி, உதயநிதிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடையே திட்டவட்டமாக தெரிவித்தார்.

 முன்னதாக, “நடிப்பதை நிறுத்துகிறீர்களா?” என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அதுல ஏன் உங்களுக்கு அவ்வளவு கவலை” என கலகலப்பாக கேட்டார். இதனால் இவரது ரசிகர்கள் கவலையில் இருந்தாலும் அமைச்சராக பதவி ஏற்றதற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement