• Jul 25 2025

எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது- திடீரென உருக்கமான பதிவினைப் போட்ட யோகிபாபு

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான்  'லவ் டுடே'.

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. 


இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம்ஸ் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசைத்திருப்பியுள்ளது.


 அவர் பகிர்ந்த மீம்ஸ் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது. இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement