• Jul 23 2025

விஜய்யின் வாரிசு திரைப்படத்தை யாருமே இதுவரை வாங்கவில்லையா- முக்கிய பிரபலம் போட்டுடைத்த உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு திரைப்படத்தை பற்றி முக்கிய பிரபலம் கூறிய தகவல் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இந்த பொங்கல் செம மாஸாக இருக்கப்போகின்றது. காரணம் விஜய்-அஜித் இருவரின் படங்களும் பல வருடங்களுக்கு பின்னர்  வெளியாகவுள்ளது. யார் படம் எப்படி வசூலிக்க போகிறது, அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகும் படம் எது என பல விவரங்களை காண ரசிகர்கள்  பெரும் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் இதுவரை துணிவு படத்தின் விவரங்கள் தான் அதிகம்  வெளியே வந்துகொண்டிருக்கின்றன.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழகத்தின் விநியோக உரிமையை வாங்கி இதுவரை 70% திரையரங்குகளை புக் செய்துவிட்டதாக சொல்லப்படுகின்றது அதேபோல் வெளிநாடுகளில் விநியோக உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

ஆனால் வாரிசு பட வியாபாரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அத்தோடு திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் ஒரு பேட்டியில் இதுவரை வாரிசு திரைப்படத்தை யாருமே வாங்கவில்லை, யார் வாங்குகிறார் என்பது கூட தெரியவில்லை.

இதன் பின்னர் எப்படி திரையரங்குகள் ஒதுக்க முடியும் என ஒரு பேட்டியில் கூறியிருப்பது தளபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement