• Sep 08 2025

ரஜினியை கேள்வி கேட்க யாருக்கும் அருகதை கிடையாது- காரசாரமான பதிலடி கொடுத்த பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். அனிரூத் இசையமைப்பில் உருவான இபடத்திற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

மேலும் படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் ரஜினிகாந்த் இமய மலைக்குச் சென்றிருந்தார். அத்தோடு பல இடங்களைச் சென்றும் பார்வையிட்டிருந்தார்.இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


மேலும் ரஜினிகாந்த சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருவது ரசிகர்களிடையே பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இப்படியான சூழ்நிலையில் நடிகர் வைஜி மகேந்திரன் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.


அதில் அவர் கூறியதாவது,அவர் இதைப் பண்ணுறாரு, அதைப் பண்ணுறாரு என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை, அவர் ஏன் இங்க போறாரு, ஆன்மீகத்தில் கவனம் செலுத்திறாரு என்று கேட்க யாருக்கும் உரிமையில்லை. அது அவரோட தனிப்பட்ட விஷயம். ரஜினி பற்றியே எதுக்கு சொறிஞ்சிட்டு இருக்கிறீங்க.அவரை வைச்சு நீங்க எல்லாருக்கும் தெரியனும் என்று தானே என்றும் காரசாரமாகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement