• Jul 24 2025

என் புகைப்படத்தை யாரும் பயன்படுத்த கூடாது.. ரஜினிகாந்த் விடுத்த திடீர் அறிவிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின்  சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி காந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக  பெற்றது.


இதையடுத்து இவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.மேலும்  இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற  முக்கிய பல பிரபல நடிக்கவுள்ளனர்.

அத்தோடு நடிகர் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சிலர் ரஜினி காந்தின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகள் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இவ்வாறுஇருக்கையில் ரஜினிகாந்தின் பெயரும், புகைப்படமும் மற்றும் குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக பயன்படுத்து கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement