• Jul 24 2025

அந்த பழக்கம் வேறெந்த நடிகருக்கும் கிடையாது- அஜித் குறித்து புதிய தகவலைக் கூறிய பிரபல காமெடி நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நல்ல மனிதர் என்று போற்றக் கூடிய முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவர் சினிமாவைத் தாண்டி பயணங்கள் மேற்கொள்வதிலும் பிறருக்கு உதவி செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் துணிவு என்னும் படத்தில் நடித்த வருகின்றார்.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார். படப்பிடிப்பும் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. அடுத்த வருடம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில் அஜித்துடன் சில படங்களில் நடித்த பிரபல நடிகரான மதன் பாப் சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” அஜித் சார் மிகவும் நல்ல மனிதர். ஒரு குழந்தை மாதிரி என்னிடம் பேசுவார்.

அவர் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தார், நான் அதற்கு பக்கத்தில் வேறொரு படத்தில் நடிப்பதற்காக இருந்தேன். அவர் இருந்தார் என்பதால் அவரை பார்க்க கேரவனுக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் எழுந்து கட்டிபிடித்து நீங்கள் என்ன சாப்பிட போறீங்க என்று கேட்டார்.

சாப்பிடாம போக கூடாது என்று சொன்னார். அந்த பழக்கம் வேறெந்த நடிகருக்கும் கிடையாது. அஜித் அஜித் தான்” என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தல எப்பவுமே சிறந்த நடிகர் தான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..


Advertisement

Advertisement