• Jul 25 2025

போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்... லியோ திரைபடக்குழு அனுப்பிய கடிதம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லியோ. இதன் ஆடியோ லஞ்ச் நிகழ்வானது வருகிற செப்டெம்பர் 30-ஆம் திகதி  நேரு விளையாட்டரங்கில் சிறப்பாக  நடைபெற லியோ திரைபடக்குழு ஏற்பாடு செய்திருந்தது.


இதில் அதிகப்படியான ரசிகர்கள்  கலந்து கொள்ள விருப்பம்காட்டிவந்தனர். கடந்த 20-ஆம் திகதி லியோ லஞ்ச் நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என லியோ திரைபடக்குழு போலீசாருக்கு கடிதம் வழங்கியிருந்தது. 


அதிகப்படியான டிக்கட்டுக்கள் ரசிகர்கள் கூறிவந்த நிலையில் லியோ ஆடியோ லஞ்ச் நிகழ்வில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என ரசிகர்கள் பாதுகாப்பு கருதி ஆடியோ லஞ்ச் ரத்து செய்யப்பட்டதாக  லியோ படக்குழு அறிவித்தது. இந்த செய்தியானது ரசிகர்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லியோ ஆடியோ லஞ்ச்  நிருத்தப்பட்டதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக  காரணங்களும் பரப்பப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் லியோ திரைபடக்குழு போலீசாருக்கு கடிதம் ஒன்றை வழங்கி உள்ளது . அக்கடிதத்தில் "நடைபெற இருந்த லியோ ஆடியோ லுஞ்ச நிகழ்வுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் தற்போது லியோ ஆடியோ லஞ்ச் நடைபெறாததால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டாம் " என லியோ திரைப்படகுழு  நிறுவனம் காவல்மேடு காவல்துறைக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.


Advertisement

Advertisement