• Jul 25 2025

சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது- விசேட உத்தரவைப் பிறப்பித்த உயர் நீதிமன்றம்

stella / 3 years ago

Advertisement

Listen News!

கதாநாயகனாக மட்டும் அல்லாது நெக்கட்டிவ் ரோல்களிலும் நடித் அசத்தி வரும் நடிகர் தான் சூர்யா. அந்த வகையில் இவர் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இவர் கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியாகிய சூரரைப் போற்று ஜெய்பீம் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.இதில் ஜெய்பீம் திரைப்படம் தேசிய விருது பெறும் அளவுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

இருப்பினும் இப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேளச்சேரி போலீஸ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பான வழக்கை ஜூலை 21க்கு நீதிபதி ஒத்திவைத்ததோடு நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement