• Jul 25 2025

ஓ மை கோட் எவ்வளவு அழகாக இருக்கிறேன்- நடிகை மீனா வெளியிட்ட பஃன்னி வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் மீனா. 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பதும் முக்கியமாகும்.

1990களில் நவயுகம் படத்தில் ராஜேந்திர பிரசாத்துடன் தெலுங்கில் நாயகியாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து கஸ்தூரி ராஜா இயக்கிய ராஜ்கிரனுக்கு ஜோடியாக என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சோலையம்மாவாக மீனா நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். 


இதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சில ஆண்டுகளுக்கு முதல் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.இருப்பினும் இவருடைய கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு இறப்புக்குள்ளானார்.

கணவரின் இறப்பிற்கு பின்னர் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழித்து வரும் மீனா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது ஓ மை கோட் எவ்வளவு அழகாக இருக்கிறேன். என ஒரு பஃன்னியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement