• Jul 25 2025

''ஓ சொல்றியா மாமா''...சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி டான்ஸ் ஆட போகும் நடிகை.? வெளியானது புஷ்பா 2 அப்டேட்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றேசொல்லலாம் . முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் மும்முரமாக உருவாகி வருகிறது.

புஷ்பா முதல் பாகத்தில் ''ஓ சொல்றியா மாமா''.. பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு மெகா ஹிட் ஆனது.

எனவே, முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திலும் அப்படி ஒரு பாடல் இருக்கிறதாம். அந்த பாடலில் நடனமாட தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது புதிய தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது.

அது என்னவென்றால், புஷ்பா 2 திரைப்படத்தில் சமந்தாவுக்கு பதிலாக பிரபல நடிகையான சாய் பல்லவி ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதற்காக சாய் பல்லவி 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.






Advertisement

Advertisement