• Sep 12 2025

ரூமைப் பார்த்ததும் பாராட்டித் தள்ளிய சூர்யா... பதிலுக்கு திட்டித் தீர்க்கும் மகா... அட்டகாசமான 'ஆஹா கல்யாணம்' சீரியல் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வாறு வசதியான இடத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதால் மாப்பிள்ளை வீட்டில் அந்தப் பெண் என்னெனன்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ரூமிற்குள் நுழைந்த சூர்யா ரூம் ரொம்ப சுத்தமாகவும், அழகாகவும் இருப்பதை பார்த்து சூர்யா வியப்பில் புகழ்ந்து, ரூம் சுத்தம் பண்ணியவரை பாராட்டித் தள்ளுகின்றார்.


பின்னர் அந்த ரூமை அழகாக மாற்றியது மகா தான் எனத் தெரிந்ததும் சூர்யா "ரூம் நல்லாவே இல்லை, மொக்கையாய் இருக்கு" எனக் கூறி மகா மேல் எரிந்து விழுகின்றார்.

அதற்கு மகா "இப்ப தானே நல்லா இருக்கு என்று பாராட்டினீங்க, அதே வாயால கேவலமாய் இருக்கு என்றீங்க" எனக்கூறித் திட்டுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement