• Jul 26 2025

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த அசல் கோலாறு- ஏடிகேவிற்கு காத்திருந்த சம்பவம்- முதலாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த  Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. 

இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது. இதில் அமுதவாணன் பெற்றி பெற்று முதல் இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.

தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பிரபலங்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.அவர்கள் வந்து பலரின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் என அனைத்து விஷயங்களையும் கூறியதால், ஏன் அவர்கள் வருகை தந்தார்கள் என்பது போல போட்டியாளர்கள் கதி கலங்கியும் போயிருந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது அசல் கோலாறு மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வந்துள்ளனர். அதில் அசல் ஏடிகேவிடம் சண்டை பிடிப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement