• Jul 25 2025

ஒன்றா..இரண்டா...இத்தனை நடிகைகளை காதலித்து கைவிட்டாரா நடிகர் பிரபு...வெளியான திடுக்கிடும் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

70களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல் ஹாசன் மீது பல நடிகைகள் நெருக்கமாகவும் காதல் கிசுக்கிசுக்களில் சிக்கியும் வந்தனர். அப்படி காதல் மன்னனாக அப்போதில் இருந்தே கொடிக்கட்டி பறந்த கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் பிரபுவின் லீலைகள் அமைந்திந்து உள்ளது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரபு சில நடிகைகளிடம் வெளிப்படையான காதலில் இருந்து வந்தார்.

எனினும் அந்தவரிசையில் முதலில் இருப்பது நடிகை குஷ்பூ. வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக பிரபுவுடன் நடித்து வந்தார். அப்போது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் வரை சென்று அதன்பின் கைகூடாமல் போனதாகவும் சொல்லப்பட்டது.

அதன்பின் நடிகை ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்த பிரபு, அவரின் அழகில் ஈர்க்கப்பட்டார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அந்த காதலையும் கழட்டிவிட்டிருக்கிறார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபுவுடன் 7 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்தவர்  தான் நடிகை அம்பிகா. அவருக்கு பிடித்தமான நடிகையாக அம்பிகா மாறியதால், பிரபு காதலித்து கல்யாணம் வரை போகாமல் பாதியிலேயே அந்த காதலை முடித்துக்கொண்டார். அத்தோடு அம்பிகா பிரபுவின் அப்பா நடிகர் திலகம் சிவாஜியுடனும் நடித்திருக்கிறார்.

பிரபுவுடன் பல படங்களில் நடித்து வந்த நடிகை நதியாவையும் விட்டுவைக்கவில்லையாம். ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்ததால் நதியா மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதுவும் சரியாக அமையாமல் போனதாம்.

நடிகை தேவிகாவின் மகளான கனகா 4 படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் அப்போது கனகாவின் கண்ணழகில் ஈர்க்கப்பட்ட புரபு அவரே கதியாகவும் இருந்து வந்தார். அதன்பின் அவரையும் பிரிந்துவிட்ட வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபு.





Advertisement

Advertisement