• Jul 26 2025

அன்னிக்கு 300பேர் மட்டும் வந்தாங்க.. இன்னிக்கு 1000 கண்கள் என்னைப் பார்க்குது.. உருக்கமாக பேசிய ஷகிலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு பிரபல கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலாவின்  பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் தன்னுடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டியவர்.

ஷகிலா தமிழ் சினிமா உலகில் ஒரு துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின்னர் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி அங்கு கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகின்றார்.


இந்த நிலையில் ஷகிலா அவர்கள் சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோவில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அதில் கலந்து கொண்டு பேசுகையில் "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளுடைய ஆசிர்வாதம் தான். நான் கடந்த முறை கேரளா வந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தேன்.


வணிக வளாகம் ஒன்றில் நுழைய கூட என்னை அனுமதிக்கவில்லை. ஆனால், கடவுள் எனக்காகத்தான் இந்த திட்டங்களை செய்திருக்கிறார் என்று நான் இப்போது உணர்கிறேன். வணிக வளாகத்தில் என்னை பார்க்க 300 பேர் மட்டும் தான் வந்திருந்தனர். ஆனால், இப்போது என்னை ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கிறார்கள். இது எல்லாம் சிவனுடைய திட்டம்" என்று மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் ஷகிலா.

Advertisement

Advertisement