• Jul 26 2025

அமுது மட்டும் எனக்கு இப்படித் தான்.. Janany சொன்ன விஷயம்!!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

இவ்வாறுஇருக்கையில், தற்போது தனியார் ஊடகத்திற்கு  பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஜனனி பகிர்ந்து கொண்டார்.

நாமினேஷன் காரணமாக, உள்ளே இருப்பதே பயமாக இருந்தது என குறிப்பிட்ட ஜனனி, பேசினாலும் பயம், பேசாமல் இருந்தாலும் பயம், சண்டை போட்டாலும் பயம்  என கூறி, எப்படி இருந்தாலும் வந்து சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

அதே போல, அமுதவாணனுடன் அதிகம் நட்பாக பழகுவது குறித்தும் சில விஷயங்களை பேசி உள்ளார். அத்தோடு பிக்பாஸ் வீட்டில் அமுதவாணன் மற்றும் ஜனனி ஆகியோர் நட்பாக இருப்பது பற்றி மற்ற போட்டியாளர்கள் நிறைய கருத்துக்களை முன் வைத்து வந்தனர்.

இந்த நிலையில், அமுதவாணனுடனான நட்பு குறித்து தற்போது பேசிய ஜனனி, "எல்லாரும் பொய்யா பழகுறாங்க, ஒரு கட்டத்துக்கு மேல என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனா அமுதுவை பொறுத்தவரைக்கும் ஒரு நட்பை தாண்டி, எனக்கு ஒரு அண்ணா மாதிரி. நிறைய Care பண்ணும். அத்தோடு எனக்கு நிறைய தடவ அட்வைஸும் சொல்லி இருக்கு. நான் பேசுறதுனால டாஸ்க் ஒழுங்கா பண்ணாலும் சப்போர்ட் முடியலன்னு அமுது சொல்லுவாங்க. மத்தவங்க பொய்யா பழகுறாங்க. என் பின்னாடியும் நிறைய பேரு பேசுவாங்க. ஆனா அமுது உண்மையா பழகுறாரு. அதுக்காகவே அவருகிட்ட பேசுவேன்" என ஜனனி கூறி உள்ளார்.

Advertisement

Advertisement