• Jul 24 2025

இந்த இரண்டும் கிடைச்சால் மட்டும் போதும் நண்பா... குட்டி ஸ்டோரியில் வாழ்க்கைத் தத்துவம் சொன்ன விஜய்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் தான் தற்போது சினிமாத் திரையுலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்று நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தான். அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மேடையில் தோன்றவுள்ளதால் ரசிகர்கள் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்திருந்தனர்.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். தளபதியை நேரில் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரிக்க நேரு அரங்கமே அதிர்ந்தது. 


இந்நிலையில் விஜய் இந்த விழாவில் ஆவது அரசியல் பற்றிப் பேசுவாரா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் எப்போதும் போல அவரது குட்டி ஸ்டோரி ரசிகர்களை ஏமாற்றவில்லை. அந்தவகையில் அவர் சொன்ன குட்டி ஸ்டோரி என்னவென்றால், ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருக்கின்றனர். அப்பா தினமும் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பும் போது இரண்டு சாக்லேட் வாங்கிவருவார்.

அதில் ஒன்று தங்கைக்கு, இன்னொன்னு அண்ணனுக்கு. தங்கை அந்த சாக்லேட்டை அன்றைக்கே சாப்பிட்டு முடித்து விடுவாள். ஆனால் அண்ணன் அதை அடுத்த நாள் சாப்பிடலாம் என நினைத்து ஒரு இடத்தில் ஒளித்து வைப்பான். இருப்பினும் அண்ணன் ஒளித்து வைத்த அந்த சாக்லேட்டை தங்கை எடுத்து சாப்பிட்டுவிடுவாள்.


இதே போல் தினமும் நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ஒரு நாள் தங்கை அண்ணனிடம், அன்பு என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அண்ணன், நான் ஒளித்து வைத்த சாக்லேட்டை நீ எடுத்துடுவ என தெரிந்தும் நான் அதே இடத்தில ஒளித்து வைக்கின்றேனே அதுதான் அன்பு என்றான்.

எனவே அன்பு மட்டுமே இந்த உலகத்தையே ஜெயிக்கவைக்குற ஒரே ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக்கொடுக்குற உறவுகள், நம்மை யாரிடமும் விட்டுக்கொடுக்காத நண்பர்கள், இந்த இரண்டும் இருந்தா போதும் என விஜய் தன்னுடைய குட்டி ஸ்டோரியை முடித்துவிட்டார். இவர் கூறிய இந்த விஷயமானது தற்போது பேசுபொருளாக மாறி வருகின்றது.

Advertisement

Advertisement