• Jul 26 2025

ஒரு நாளைக்கு மட்டும் ரூ. 4 லட்சம் வாங்கினாரா..நடிகை ஷகிலா..? அவரே கூறிய உண்மை தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்திக் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர். இதை அவரை பல பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகிலா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், என்னை குறித்து விக்கிபீடியாவில் இருக்கும் விவரங்கள் பொய்யானது. எனக்கு பிளாட் ,BMW காரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நான் வாடகை வீட்டில் இருந்து வருகிறேன்.

ஒரு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 4 லட்சம் சம்பளம் வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் என்னுடைய அக்கா எடுத்து கொண்டார் என்று ஷகிலா உருக்கமாக பேசியிருக்கிறார்.

Advertisement

Advertisement