• Jul 25 2025

அச்சோ.. ஷிவானி உங்க புருவத்துக்கு என்ன ஆச்சு? ஷாக்கான ரசிகர்கள்..!வைரல் புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துக்கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் படமே உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் என்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என அவரே பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

விஜய்சேதுபதியின் மனைவியாக விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி நாராயணன் டிஎஸ்பி படத்தில் விஜய்சேதுபதியின் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக நடித்து அசத்தினார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன லுக் புதுசா இருக்கே என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

 இந்நிலையில், தனது அடுத்த படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ரொம்பவே உடல் எடையை குறைத்து முகத்திலும் ஒரு சில மாற்றங்களை நடிகை ஷிவானி செய்துள்ள நிலையில், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்துக்காக தற்போது ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இது எந்த படத்துக்கான லுக் ஷிவானி என்றும் ஓவரா மெலிஞ்சிட்ட ஷிவு என்றும் நலம் விசாரித்து வருகின்றனர்.

 நடிகை ஷிவானியின் புருவங்கள் அவருக்கு நேச்சுரல் அழகை கொடுத்து வந்த நிலையில், தற்போது அந்த புருவத்தை டோட்டலாக மாற்றி உள்ளதை கண்ட ரசிகர்கள், ஷிவானி உங்க புருவத்துக்கு என்ன ஆச்சு? முதலில் இருந்தது ரொம்ப நல்லா இருந்துச்சே.. இது ஆர்ட்டிஃபிஷியலா இருக்கு என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் வெற்றியுடன் ஷிவானி இணைந்து நடித்துள்ள பம்பர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ஷிவானி எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த ஹாட் அப்டேட்களையும் ஷிவானி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.


Advertisement

Advertisement