• Jul 26 2025

ஆஸ்கார் விருதை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல்.. குஷியில் மேடையேறி குத்தாட்டம் போட்ட பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் 'ஆர்.ஆர்.ஆர்' படம் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி எனப் பலர் நடித்திருந்ததோடு, கீரவாணி இசையமைத்திருந்தார். 


இந்நிலையில் அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95-ஆவது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் விருது வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கான விருதை இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 


குறிப்பாக இந்த பாட்டின் நடன அசைவுகள் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஆட்டம் போடவும் வைத்தது. இதனையடுத்து நாட்டு நாட்டு பாடலிற்கு ஆஸ்கர் விருது வழக்கும் மேடையில் பல பிரபலங்கள் இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.


அந்த வீடியோ ஆனது தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement