• Jul 26 2025

எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அவருக்கு தெரியாமல் தான் யூஸ் பண்ணி இருக்கிறேன்- ஓபனாகப் பேசிய அதிதி ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் ஷங்கரின் மகள் ஆவார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 விருமன் படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தக் கேரக்டரில் மிகவும் பொறுப்பான பெண்ணாக நடித்திருந்தார். இதேபோல மாவீரன் படத்தில் பத்திரிகையாளராக இயல்பான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் சற்றும் பொருந்தாத சுபாவம் தன்னுடையது என்று தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அதிதி. 


மிகவும் துருதுருவென தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக்கும் பெண்ணாக காணப்படுகிறார் அதிதி. அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் . தனக்கு கிடைத்த வாய்ப்புகள் தன்னுடைய தந்தை மூலமாக வரவில்லை என்றும் தான் கதை கேட்டுவிட்டு அப்பாவிடம் சொல்வேன், அவர் அனுமதியுடன்தான் படத்தை தீர்மானிக்கிறேன் என்றும் அதிதி கூறியுள்ளார்.

 தன்னுடைய கேரியருக்கு சிறப்பாக தன்னுடைய அப்பா மற்றும் அம்மா முழு ஒத்துழைப்பை தந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு அடுத்ததாக தன்னுடைய அப்பா ஷங்கர் இயக்கத்திலும் திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் இயக்கத்திலும் லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் அதிதி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

தன்னுடைய அப்பாவை போல இயக்குநர் ஆகும் கனவெல்லாம் தனக்கு இல்லை என்றும் அதிதி கூறியுள்ளார். விருமன் படத்தின் ரிலீசை தொடர்ந்தே தான் சமூக வலைதளப்பக்கத்தில் இணைந்ததாகவும் விருமன் படத்தின் ரிலீஸ் குறித்த போஸ்ட்டே தனது முதல் பதிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


முன்னதாக வீட்டிற்கு தெரியாமல் சில நேரம் இவற்றை பயன்படுத்தியுள்ளதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய வீட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததாகவும் தான் தன்னுடைய படிப்பில் கவனமாக இருக்கவே அப்பா இந்தளவிற்கு கண்டிப்பாக இருந்ததாகவும் அதிதி குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement