• Jul 24 2025

எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. அழகான சல்வாரில் கட்டழகை காட்டி சொக்க வைக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கேரளாவை சேர்ந்த அபர்ணாதாஸ் மலையாள படங்களில் நடித்து வருபவர். கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகவே இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.


நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான பீஸ்ட் படம் மூலம் அபர்ணா தாஸ் கோலிவுட்டில் அறிமுகமானார்.அதன்பின் மீண்டும் மலையாள சினிமா பக்கம் சென்றார். கவின் ஹீரோவாக நடித்த டாடா படத்தில் நடித்து தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.


டாடா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விமர்சகர்களிடம் பாராட்டையும் பெற்றுள்ளார். எனவே, தமிழில் இவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மார்க்கெட்டை பிடிக்க இதுதான் சரியான நேரம் என கணக்குப்போட்ட அபர்ணா சக நடிகைகளை போல அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில், சிவப்பு நிற சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அபர்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement