• Jul 24 2025

ஓவர் ஆட்டிட்யூட்... எனக்கு சூர்யாவ சுத்தமா பிடிக்காது.. பிரபல பத்திரிகையாளர் பரபரப்பு பேச்சு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவை தனக்கு சுத்தமா பிடிக்காது என பிரபல பத்திரிகையாளர் கூறிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார். ஏராளமான ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் நடிகர் சூர்யா, வறுமையில் தவிக்கும் சினிமா கலைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.அத்தோடு சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த தேசிய விருதை பெற்றார் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல் மற்றும் சூர்யா 42 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு நடிகர் சூர்யா சமீபத்தில் மும்பையில் செட்டிலானார். மும்பையில் புதிய பிஸ்னஸை தொடங்கியுள்ள நடிகர் சூர்யா, பாலிவுட் படங்களை தயாரிக்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை ஜோதிகாவும் இந்தி படங்களில் நடித்து வருவதால் மும்பையில் செட்டிலானதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நடிகர் சூர்யா, நன்றி மறந்தவர் அடையாளப் படுத்திய தமிழ் திரையுலகில் விட்டுவிட்டு பாலிவுட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளரான அந்தணன், சூர்யா மும்பையில் வீடு வாங்கியதில் என்ன தவறு என கேட்டுள்ளார். மேலும் இப் படப்பிடிப்பு இருக்கும் போது சென்னைக்கு வந்து செல்வார், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


அத்தோடு  ஒரு நடிகராக சூர்யாவை எனக்கு பிடிக்காது. அவரது நடிப்பில் ஓவர் ஆட்டிட்யூட் இருக்கும் என்பதால் எனக்கு பிடிக்காது. ஆனால் சூர்யா மிகவும் நல்ல மனிதர். 5000 குழந்தைகளுக்கு படிப்பு கொடுத்து அவர்களை வாழ வைத்தவர் சூர்யா. அத்தோடு பல நடிகர்கள் தான் வாங்கும் சம்பளத்தை எங்கெங்கேயோ போய் கொட்டும் நிலையில் சூர்யா மட்டும்தான் அகரம் அறக்கட்டளை மூலம் குழந்தைகளை வாழ வைத்து வருகிறார்.

மேலும் அவரை விமர்சிப்பது தவறு என கூறியுள்ளார் பத்திரிகையாளர் அந்தணன். நடிகர் சூர்யா சமீபத்தில் குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்றார். அப்போது சூர்யா குடும்பத்தினர் வருகைக்காக பள்ளிக்கூட குழந்தைகள் அருங்காட்சியகத்திற்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.அத்தோடு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் சூர்யா நடித்துள்ள சூர்யா 42 படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு K என்ற எழுத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் அதிக செலவில் உருவாகும் படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement