• Sep 08 2025

bigg-boss-season 7 இல் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு அதிகம் தான். இந்த சூழலில் பிக் பாஸ் 7 எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

அதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் துாண்டியுள்ளது. அதாவது இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக கமல் அந்தப் ப்ரோமோவில் கூறியிருந்தார். இதனால் இந்த சீசன் வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


மேலும் இந்த சீசனில் ம கா பா ஆனந்த், விஜே பாவனா, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இவர்களோடு பிக்பாஸ் சீசன் 1 பிரபலமான ஓவியாவும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நடிகை ஓவியா இது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கூறுகையில், "பிக் பாஸ் ப்ரோமோ நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நான் போகிறேன் என நினைக்கிறேன். இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை.


கால் பண்ணி இருந்தார்கள். நான் இன்னும் முழுமையாக யோசிக்கவில்லை. முதல் சீசனில் ஒன்றுமே தெரியாது. என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. முதல் சீசனை பார்த்து எல்லா சீசனுக்கும் வந்தவர்கள் நடந்து கொண்டார்கள். வெளியே இருந்து பார்த்தால் சீரியல் போல் பார்க்காலாம். ஆனால் உள்ளே இருக்கும் அழுத்தம் யாருக்கும் தெரியாது" என்றார்.

Advertisement

Advertisement