• Jul 25 2025

அடிக்கடி கருக்கலைப்பால்தான் ஓவியாவின் உடல் இப்படி..? பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வன் ரங்கநாதன் நடிகை ஓவியா குறித்து பேசியிருப்பது  திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல நடிகராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கங்களை கூறி திரைவட்டாரத்தில்  பெரும் பிரபலமாக திகழ்கிறார்.நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கோபத்திற்கும் ஆளாகி வருகின்றார் என்றும் கூற வேண்டும்.

நடிகர் நடிகைகள் குறித்து அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் அசராத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் குறித்து வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றில் நடிகை ஓவியா குறித்து அவதுாறாக பேசி வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது நடிகை ஓவியா பணத்திற்காக ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் என சென்று வருவதாகவும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும் ஓவியா உடல் எடை குறைந்து காணப்படுவதற்கு அவர் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததுதான் காரணம் என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். உடல் எடை குறைவது குறித்து தான் ஒரு மருத்துவரிடம் கேட்டதாகவும் அதற்கு அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும் என்றும் கூறியுள்ளார்.


இதனைக் கேட்ட ஓவியா ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அத்தோடு உங்கள் வீட்டு பெண்கள் எடை குறைவதற்கும் அதுதான் காரணமா என்றும் கேட்டு விளாசி வருகின்றனர். சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயர் குறித்து அவதூறாக பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இதனால் கடுப்பான அவர் நட்ட நடு ரோட்டில் வைத்து அவரை கிழித்து தொங்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Advertisement

Advertisement