• Jul 25 2025

ஓவியாவின் காதலர் இவர்தானா.? நேரலையில் கொடுத்த முத்தம்.. என்ன ஒரு நெருக்கம்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'கங்காரு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதனைத் தொடர்ந்து 'நாளை நமதே'  படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ஓவியாவுக்கு விமல் உடன் அவர் நடித்த 'களவாணி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. 


அதன் பிறகு ஓவியா நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக மாறத் தொடங்கின. இதன் பிறகே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியேறினாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என்று தனி ஆர்மி உருவானதால், சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இருப்பினும் அதன் பின்னர் '90ml , காஞ்சனா 3' ஆகிய படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சில காலமாக சினிமாப் பக்கமாக இவரைக் காண முடியவில்லை. இதனால் ஓவியா எங்கே என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்திருந்தனர்.


இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கின்றது. அதாவது நேரலையில் வீடியோவில் பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென ஒருவர் நெருக்கமாக வந்து அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். 


இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் காதலரா, இல்லை ஓவியா அவரை திருமணம் செய்து கொள்ள போகிறாரா என அடுக்கடுக்கான கேள்விகளை தமது பாணியில் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது இணையத்தில் தற்போது இந்த வீடியோவானது வைரலாகியும் வருகிறது.

Advertisement

Advertisement