• Jul 25 2025

என்னை விட அவ தான் அழகா இருக்கிறா- மாடர்ன் உடையில் பாக்கியாவை ஓரக் கண்ணால் ரசிக்கும் கோபி- அடடே செம சூப்பராக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியட்சுமி. இந்த சீரியலில் முதலில் சீரியஸான காரெக்டரில் வலம் வந்த கோபி தற்பொழுது காமெடியாக நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபியின் நடிப்பிற்காகவே பலரும் இந்த சீரியலலை கண்டு களித்து வருகின்றனர்.

பாக்கியாவுக்கு திருமணம் என நினைத்து இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்பதிலும் குறியாக இருந்து வருகின்றார். இதனால் பழனிச்சாமி வீட்டுக்கு நேராகச் சென்று பாக்கியாவைத் தன் மனைவி என்றும் அவள் கூட பேசக் கூடாது என்றும் கட்டளை போடுகின்றார்.


பழனி பாக்கியாவுடன் தான் பேசுவேன் என்பதில் உறுதியாக இருக்கின்றார். இது தொடர்பான எப்பிஷோட் இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ளது. மேலும் கோபிக்கு எப்போது உண்மை தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் பாக்கியாவுடன் மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டதோடு அதற்கு கேப்ஷனாக நான் ஸ்டைல் போஸ் பண்ணலாம் என்று பார்த்தால் அதுக்கு முன்னாடி பாக்கியா பண்ணிட்டா என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போ எல்லாம் பாக்கியா கூடவே அதிக போட்டோ போடுறீங்களே கோபி எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement