• Jul 24 2025

எலும்புக்கூடுடன் டூயட் பாடும் பாக்கியலட்சுமி கோபி...விமர்சகர்களிடம் தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பாக்கியலட்சுமி சீரியல் கோபி எலும்புக்கூடுடன் இருக்கும் புகைப்படம்  சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி. அத்தோடு இந்த சீரியலின் கதை மற்றைய சீரியல்களை விட சற்று வித்தியாசமாக காணப்படுகிறது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக்கியுள்ளது.கோபியுடன் தான் நான் இருப்பேன் என பையுடன் ராதிகா, பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாக்கியலட்சுமி கோபி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.

அதில் சில வீடியோக்கள் விமர்சகர்கள் கையில் சிக்கி சீரியலை விட்டு விலக போவதாக கூட ட்ரோல் செய்து வந்தார்கள். எனினும் அந்த வகையில், சமிபத்தில் எலும்புக்கூடுடன் டூயட் பாடும் காட்சி பகிர்ந்துள்ளார்.

இதனை பார்க்கும் போது, "இரண்டு பொண்டாட்டி கட்டினவர்களின் நிலை இப்படி தான் போல" என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.



Advertisement

Advertisement